சுவையான பூண்டு ஊறுகாய் SAMAYAL TAMIL TIPS

சுவையான பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
PoonduUrugai ,SamayalTamilTips

தேவையான பொருள்கள் :

பூண்டு                           -   1/4கிலோ
நல்லெண்ணெய்      -   2ஸ்பூன்
உப்பு                              -    தேவைக்கேற்ப
எலுமிச்சம் பழம்       -     1

அரைக்க வேண்டிய பொருள்கள் :

கடுகு                 -    1ஸ்பூன்
சீரகம்                -    1ஸ்பூன்
மல்லி                 -    1ஸ்பூன்
மிளகாய்           -     5ஸ்பூன்
வெந்தயம்        -     1ஸ்பூன்
பெருங்காயம் -     1ஸ்பூன்

செய்முறை :

பூண்டை உரித்து கொள்ளவும்.வாணலியில் அரைக்க கொடுத்துள்ளதை எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்து கொள்ளவும்.வாணலியில் நல்லெண்ணெய் விட்டு பூண்டை போட்டு வதக்கவும். எண்ணெய் அதிகம் சூடாகாமல் மிதமான சூட்டில் வதக்கவும்.சற்று சிவந்து வந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியையும் உப்பையும் போட்டு கிண்டி, அடுப்பை உடனே அணைத்து விடவும்.பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாற்றை அதில் விடவும்.ஆறியவுடன் கண்ணாடி ஜாடியில் எடுத்து வைக்கவும்.
சுவையான பூண்டு ஊறுகாய் ரெடி ....

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

நன்றி ...
TRUCKOHOLICS ,   ADS

Post a Comment

0 Comments