சுவையான இனிப்புச் சீடை SAMAYAL TAMIL TIPS

சுவையான இனிப்புச் சீடை செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் . 
InippuSidai ,SamayalTamilTips

தேவையான பொருட்கள்:

பச்சரிசி                      -   2கப்
வெல்லம்                    -   2கப்
பொட்டுக் கடலை  -   1/2கப்
தேங்காய்                   -   1மூடி
எண்ணெய்                -   தேவையான அளவு

செய்முறை :

பச்சரிசியைக் கழுவி 2மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியை நீரை வடித்து விட்டு ஈர அரிசி யை மெஷினில் கொடுத்து மாவாக அரைக்கவும்.பொட்டுக் கடலையை மிக்சியில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி பாகு  காய்ச்சி வைக்கவும்.பாகில் ஈர அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டுக் கிளறவும்.அதனுடன் பொட்டுக் கடலை மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணை ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும் .
சுவையான இனிப்புச் சீடை ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

நன்றி ...

TRUCKOHOLICS ,   ADS 

Post a Comment

0 Comments