சுவையான எலுமிச்சை ரசம் SAMAYAL TAMIL TIPS

சுவையான எலுமிச்சை ரசம் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
LemonRasam , SamayalTamilTips

தேவையான பொருள்கள் :
எலுமிச்சை                   -     2
தக்காளி                        -     1
மிளகு                             -     1ஸ்பூன்
சீரகம்                            -     1
மல்லி                            -     1ஸ்பூன்
பூண்டு                         -     4பல்
காய்ந்த மிளகாய்   -    2
மஞ்சள் தூள்              -    1/4ஸ்பூன்
கடுகு                            -    1/2ஸ்பூன்
உப்பு                             -    தேவையான அளவு
கொத்தமல்லி           -    சிறிது
கறிவேப்பிலை         -    சிறிதளவு
எண்ணெய்                -    தேவையான அளவு
பெருங்காயத்தூள் -    1/4ஸ்பூன்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் தக்காளியை நன்கு நசுக்கி விட்டு பிசைந்துக் கொள்ளவும். பூண்டு, மிளகு,சீரகம், மல்லி, காய்ந்தமிளகாய் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு பாத்திரத்தில் 1கப் தண்ணீர் ஊற்றி நசுக்கி வைத்திருக்கும் தக்காளி அதில் ஊற்றவும்.அதனுடன் அரைத்த மசாலா, மற்றும் பெருங்காயத்தூள் ,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து மிதமான தீயில் அடுப்பில்  வைத்து  நுரைத்து பொங்கி வரும்  போது எலுமிச்சைசாறு ஊற்றி  இறக்கி வைக்கவும்.பின்பு  கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்த தும்.கறிவேப்பிலை, கொத்தமல்லித்   இலை  போட்டு  தாளித்து ரசத்தில் கொட்டவும்  சுவையான எலுமிச்சை ரசம் ரெடி...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

நன்றி --

TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments