சுவையான சுரைக்காய் மோர் கூட்டு SAMAYAL TAMIL TIPS

சுவையான சுரைக்காய் மோர் கூட்டு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
SuraikaiMorKottu ,SamayalTamilTips

தேவையான பொருட் கள் : 

சுரைக் காய்               -    1
தயிர்                              -    1கப்
மஞ்சள் தூள்              -    1/4ஸ்பூன்
தேங்காய்துருவல்   -    2ஸ்பூன்
பச்சை மிளகாய்     -    2
சீரகம்                          -    1ஸ்பூன்
கடுகு                           -    1/2ஸ்பூன்
காய்ந்த மிளகாய்  -    2
பெருங் காயதூள்   -   1சிட்டிகை
கறிவேப் பிலை       -   சிறிது
உப்பு                            -   தேவைக்கேற்ப

செய்முறை : 

சுரைக் காயின் தோலை சீவி விட்டு, உள்ளிருக்கும் விதை மற்றும் வெள்ளைப் பகுதியை நீக்கி விட்டு, சிறு துண்டு களாக நறுக்கிக் கொள் ளவும். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகிய வற்றை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள் ளவும். தயிரை நன்றாக கடைந்து, அத்துடன் சிறிது நீரைச் சேர்த்து கெட்டி மோராக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுரைக்காய் துண்டுகளைப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, காய் அளவிற்கு சிறிது நீர் சேர்த்து வேக விடவும். காய் வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு பின் மோரைச் சேர்த்துக் கிளறி விட்டு, உடனே அடுப்பை அணை த்து விடவும். நீண்ட நேரம் கொதிக்க விடக் கூடாது.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு,பெருங்காயம்,காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து,கிளறி விட்டு, இந்த தாளிப்பை கூட்டில் கொட்டிக் கிளறவும்.
சுவையான சுரைக்காய் மோர் கூட்டு ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

நன்றி --
TRUCKOHOLICS , ADS



Post a Comment

0 Comments