சுவையான பால் ரவை கேசரி SAMAYAL TAMIL TIPS

சுவையான பால் ரவை கேசரி செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் . 
PaulRavaiKesari , SamayalTamilTips

தேவையான பொருட்கள் : 

ரவை                        -   1கப்
சர்க்கரை               -   1கப்
பால்                         -    3கப்
நெய்                        -    50கிராம்
ஏலக்காய்              -    5
கேசரி பவுடர்       -   1சிட்டிகை
முந்திரி                   -   10
உலர் திராட்சை  -   10

செய்முறை : 

ஒரு வாணலி யை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி,உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.அதே வாணலியில் ரவையை சேர்த்து குறை வான தீயில் பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 ஒரு வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித் ததும்,கேசரி பவுடர் போட்டு ஏலக்காய் போட்டு பின் அதில் ரவையை மெதுவாக சேர்த்து கிளறி விட வேண்டும்.மிதமான தீயில், தொடர்ந்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.ரவையானது நன்கு வெந்ததும், அதில் சர்க்க ரையை சேர்த்து தொடர்ந்து கை விடாமல் கிளறி, சற்று கெட்டி யாகும் போது, அதில் நெய் சேர்த்து கிளறி விட வேண்டும்.பின் வறுத்த முந்திரி,உலர் திராட்சை யை சேர்த்து கிளறி இறக்கவும் .
சுவையான பால் ரவா கேசரி ரெடி...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

TRUCKOHOLICS , ADS


Post a Comment

0 Comments