சுவையான கடலைப் பருப்பு பணியாரம் SAMAYAL TAMIL TIPS

சுவையான கடலைப் பருப்பு பணியாரம் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் . 
KadalaparuppuPaniyaram, SamayalTamilTips

தேவையானப் பொருட்கள் : 

கடலைப் பருப்பு             -     2கப்
மைதா மாவு                     -     2கப்
தேங்காய் துருவல்         -     1கப்
வெல்லம்                            -      2கப்
ஏலக்காய்                          -      6
நெய்                                    -      தேவையான அளவு
தண்ணீர்                           -      தேவையான அளவு

செய்முறை :  

முதலில் கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னா; அதனை நன்றாகக் கழுவி வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சுடானதும், தேங்காய் துருவலுடன் தேவையான அளவு நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பிறகு வேக வைத்த கடலைப் பருப்பு, வறுத்த தேங்காய் துருவல், ஏலக்காய், பொடித்த வெல்லம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்தக் கலவையை சிறிய  உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின்னர் மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ள வேண்டும். தயாராக வைத்துள்ள உருண்டை களை மைதா மாவுக் கலவையில் முக்கி எடுத்து, பணியாரக்  கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் நெய் விட்டுக் கொள்ளவும்.
உருண்டை களை கல்லில் போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான கடலைப் பருப்பு பணியாரம் ரெடி ..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

TRUCKOHOLICS , ADS


Post a Comment

0 Comments