சுவையான பூசணிக்காய் தயிர் பச்சடி SAMAYAL TAMIL TIPS

சுவையான பூசணிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
PoosanikkaiThayirPachadi , SamayalTamilTips

தேவையான பொருட்கள் :

வெள்ளை பூசணிக்காய்  -   1/4கிலோ
தயிர்                                          -   1/2கப்
இஞ்சி                                        -   1துண்டு
பச்சை மிளகாய்                  -    2
எண்ணெய்                             -    2ஸ்பூன்
கடுகு                                         -    1/2ஸ்பூன்
உளுந்து                                   -     1/2ஸ்பூன்
கறிவேப்பிலை                     -     சிறிது
கொத்தமல்லி                       -     சிறிதளவு
உப்பு                                         -   தேவையான அளவு

செய்முறை:

பூசணிக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

துருவிய பூசணிக்காயை மெல்லிய துணியில் வைத்துச் சாறு இல்லாமல் நன்றாகப் பிழிந்து வைத்துக்கொள்ளவும்.துருவிய பூசணிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

கடாயில்  எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து,சேர்த்துத் தாளித்த பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லி கிளறி இறக்கி பூசணிக்காயில் கலக்கவும்.  தேவையான அளவு உப்பு சேர்த்து உடனே பரிமாறவும்.
சுவையான பூசணிக்காய் தயிர் பச்சடி ரெடி...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

truckoholics ads

Post a Comment

0 Comments