சுவையான மஷ்ரும் பிரைட் ரைஸ் SAMAYAL TAMIL TIPS

சுவையான மஷ்ரும் பிரைட் ரைஸ் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .



தேவையான பொருள்கள் : 

சாதம்                     -     1கப்
பூண்டு                   -     3பல்
சோயா சாஸ்      -     1ஸ்பூன் 
தக்காளி சாஸ்   -     1ஸ்பூன்
மிளகு தூள்          -     1ஸ்பூன்
வெங்காய தாழ்-    1/4 கப்
கேரட்                    -     1
பீன்ஸ்                   -     10
கோஸ்                  -     50கிராம்
காளான்              -     10
எண்ணெய்        -     தேவையான அளவு
உப்பு                     -     தேவையான அளவு

செய்முறை : 

சாதம் உதிரியாக வடிக்க வேண்டும். காளானை நீளமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

காய்களை தனியாக வேக வைக்க வேண்டும் .

வாணலியில் எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். பச்சை வாசம் போகும் வரை வதக்கி காளான் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். உப்பு, சாஸ் வகைகளை ஊற்றி வதக்கி சாதத்தை சேர்க்கவும் 2 நிமிடம் வதக்கி வெங்காய தாழ் மற்றும் மிளகு தூள் தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.சுவையான மஷ்ரும் பிரைட் ரைஸ் ரெடி..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---


truckoholics ads

Post a Comment

0 Comments