கமகம மொறு மொறு மிளகாய் சிக்கன் SAMAYAL TAMIL TIPS

கமகம மொறு மொறு மிளகாய் சிக்கன் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
MoruMoruMilgaiChicken,SamayalTamilTips

தேவையான பொருள்கள் :

சிக்கன்                             -   1/2கிலோ
மிளகாய் தூள்                -   2ஸ்பூன்
மஞ்சள் தூள்                   -   1/2ஸ்பூன்
மிளகு தூள்                      -   1ஸ்பூன்
கரம் மசாலா தூள்       -   1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது -   2ஸ்பூன்
பச்சை மிளகாய்          -   2
காய்ந்த மிளகாய்       -   4
எலுமிச்சை                     -   1/2
கேசரி பவுடர்                -   1சிட்டிகை             
எண்ணெய்                    -   தேவையான அளவு
கருவேப்பிலை             -    சிறிது
உப்பு                                 -   தேவையான அளவு

செய்முறை : 

காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக விழுதாக அரைத்துக் கொள்ளவும். சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைக்கவும்.1மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து கலந்து 15 நிமிடம் வைக்கவும்.கடாயில் பொரிப்பதற்க்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும்.கமகம  மொறு மொறு மிளகாய் சிக்கன் ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..


நன்றி ---


truckoholics ads

Post a Comment

0 Comments