கமகம சுவையான இனிப்பு அவல் உருண்டை SAMAYAL TAMIL TIPS

கமகம சுவையான இனிப்பு அவல் உருண்டை செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
InippuAvalUrundai , SamayalTamilTips

தேவையான பொருட்கள் :

பொரித்த அவல்              1/4கிலோ
 எள்ளு                                  10கிராம்
 வேர்க்கடலை                    25 கிராம்
 பொட்டுக்கடலை             25 கிராம்
 வெல்லம்                             200கிராம்
 தேங்காய்                            1/2முடி
 ஏலக்காய்                            3

முதலில் தேங்காயை சிறு பற்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடியாக நசுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து பாகு காய்ச்சவும்.வாணலியில் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் பல்லை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். பின்னர் பொட்டுக்கடலை மற்றும் வேர்க்கடலையை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்து எடுக்கவும்.இறுதியாக எள்ளை வாணலியில் போட்டு நன்கு பொரிந்ததும் எடுத்து வைத்துக் கொள்ளவும். பொரித்த அவலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் வறுத்த தேங்காய் பல், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, எள், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.வெல்ல பாகு கம்பி பதம் வந்ததும் எடுத்து இந்த கலவையுடன் ஊற்றி நன்கு கிளறி விடவும். பின் உருண்டை பிடித்து வைக்க வேண்டும். கமகம சுவையான இனிப்பு அவல் உருண்டை ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..


நன்றி ---

truckoholics ads

Post a Comment

0 Comments