சுவையான பாதுஷா செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையானவை :
மைதா - 1கப்
வெண்ணெய் - 25கிராம்
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
பேக்கிங் பவுடர் - 1ஸ்பூன்
சர்க்கரை - 3/4கப்
பால் - 1/2கப்
தண்ணீர் - 1/2கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :
மைதா மாவுடன் முதலில் ஆப்பசோடா, பேக்கிங் பவுடர் இரண்டையும் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்பின்பு அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.பின்பு ஜீரா செய்ய அரை டம்ளர் தண்ணீர் சர்க்கரையைப் போட்டு கம்பி பதம் வந்ததும் லெமன் பிழிந்து விட்டு இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும்.ஊற வைத்த மாவினை லெமன் சைஸ் உருண்டைகளாக உருட்டி கையில் வைத்து வடை மாதிரி தட்டி நடுவில் குழி செய்து கொள்ள வேண்டும்இவ்வாறே அனைத்து மாவினையும் செய்து கொள்ளவும். அதிக கனமாக இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்த பாதுஷாவை கடாயில் எண்ணெய் காய வைத்து அடுப்பை சிம்மில் வைத்து மிதமான சூட்டில் இரு பக்கமும் நன்கு வெந்து பொன் நிறம் வந்ததும் எடுக்கவும்.பொரித்த பாதுஷாக்களை ஜீராவில் போட்டு 1மணி நேரம் ஊற வைத்து தனியே தட்டில் எடுத்து வைக்க வேண்டும். சுவையான பாதுஷா ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments