சிவப்பு அவல் பாயசம் SAMAYAL TAMIL TIPS

சிவப்பு அவல்  பாயசம் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
Red Aval Payasam SAMAYAL TAMIL TIPS

தேவையான பொருள்கள் :

சிவப்பு அவல்        -     150கிராம்
தேங்காய்                -     100கிராம்
வெல்லம்                 -     300கிராம்
ஏலக்காய் தூள்     -     5கிராம்
முந்திரி                    -     5
உலர் திராட்சை   -     3
நெய்                         -      3ஸ்பூன்


செய்முறை :

தேங்காயை அரைத்து பாலெடுத்துக் கொள்ளவும், மூன்று முறை பால் எடுக்கவும். மூன்றாவதாக எடுத்த நீர்த்த தேங்காய்ப் பாலில் அவலை வேக வைக்கவும். அது சிறிது கெட்டியானதும் இரண்டாவதாக எடுத்த பாலைச் சேர்க்கவும்.அவல் நன்கு வெந்ததும் அத்துடன் ஏலக்காய் தூள், வெல்லம் சேர்க்கவும். நன்றாகக் கிளறி, கெட்டி யானதும் அத்துடன் முதலில் எடுத்த கெட்டியான தேங்காய்ப் பால், தண்ணீர் சேர்த்து அடுப்பை அணைக்கவும். வறுத்த முந்திரி, உலர் திராட்சை இவற்றை நெய்யில் வதக்கி  சேர்க்கவும்.சிவப்பு அவல்  பாயசம் ரெடி..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---


truckoholics ads

Post a Comment

0 Comments