நெத்திலி மீன் வறுவல் SAMAYAL TAMIL TIPS

நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
NethiliMeenFry ,SamayalTamilTips

தேவையான  பொருள்கள் :

நெத்திலி மீன்                 -     1/2 கிலோ
எண்ணெய்                      -     தேவையான அளவு
மிளகாய் தூள்                 -     25கிராம்
மஞ்சள் தூள்                    -     1/2ஸ்பூன்
மிளகு தூள்                       -     1ஸ்பூன்
சீரக தூள்                           -     1ஸ்பூன்
உப்பு                                    -     தேவைகேற்ப
கறிவேப்பில்லை            -     சிறிதளவு
பூண்டு                                 -     5பல்
சோள மாவு                       -     25கிராம்
அரிசி மாவு                        -     10கிராம்
முட்டை வெள்ளை கரு  -    1

செய்முறை :

நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.

ஒரு தட்டில் நெத்திலி மீன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள், கறிவேப்பில்லை, நசுக்கி பூண்டு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து குளிர்சாதன பெட்டியில் 1 மணிநேரம் வைக்கவும்.மீன் கலவையை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்த பிறகு, அதில் சோள மாவு, அரிசி மாவு, முட்டை வெள்ளை கரு சேர்த்து நன்றாக பிசைந்து 15 நிமிடம் வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.சுவையான நெத்திலி மீன் வறுவல் ரெடி..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---


truckoholics ads

Post a Comment

0 Comments