சுவையான ரவை பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையானவை:
ரவை - 2கப்
சர்க்கரை - 2கப்
ஏலக்காய்தூள் - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - 4
திராட்சை - 5
பால் - 11/2 லிட்டர்
நெய - 2ஸ்பூன்
செய்முறை :
பாலை காய்ச்சிக் கொள்ளவும். ரவையை சிறிதளவு பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றாமல், ஒன்றிரண்டு முறை சுற்றி அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை, சிறு சிறு சீடை களாக உருட்டி, நிழலில் காயவிடவும்.
பாலை இரண்டு பாகமாகப் பிரித்து, ஒரு பாதியில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.பால் கொதித்ததும் சர்க்கரை சேர்த்துக் கரையவிட்டு, உருட்டி வைத்திருக்கும் ரவை உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போடவும்.உருண்டை வெந்ததும், மிதந்து மேலே வரும். எல்லா உருண்டைகளும் வெந்தபின், மீதியுள்ள பாலை அடுப்பில் உள்ள பாலோடு சேர்த்துப் பொங்கவிடவும். பால் பொங்கியதும் கீழே இறக்கி, அதில் ஏலக்காய்தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்துப் பரிமாறவும்.சுவையான ரவை பால் கொழுக்கட்டை ரெடி...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments