பயத்தம் பருப்பு கேசரி SAMAYAL TAMIL TIPS

பயத்தம் பருப்பு கேசரி செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
PayathamParuppuKesari, SamayalTamilTips

தேவையான பொருட்கள்:

பால்                              -     1/2லிட்டர்
பயத்தம் பருப்பு      -     1கப்
தேங்காய்                   -    1மூடி
திராட்சை                   -    10
முந்திரிப்பருப்பு      -    10
சர்க்கரை                    -    1கப்
ஏலக்காய்                   -     3

செய்முறை :

பயத்தம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். பாலை கெட்டியாக கோவா பதத்தில் காய்ச்சவும்.தேங்காயைத் துருவி அரைத்து  கெட்டியாகப் பாலெடுத்து வடிகட்டவும். முந்திரி, திராட்சை வறுத்து நன்கு அரைக்கவும். அகலமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரையை போட்டு அடுப்பில் வைக்கவும்.கம்பிப்பதம் வந்ததும் கோவா பால், தேங்காய்ப்பால், அரைத்த பருப்பு, அரைத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் அனைத்தையும் சேர்த்து கிளறி கெட்டியானதும் இறக்கி விடவும்.
பயத்தம் பருப்பு கேசரி ரெடி ..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி --- 

truckoholics ads

Post a Comment

0 Comments