சுவையான பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
அரைக்க தேவையானவை :
துவரம்பருப்பு - 1/4கப்
கடலைப்பருப்பு - 3/4கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
பச்சரிசி - 1/4கப்
சின்ன வெங்காயம் - 1/2கப்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - ஒரு துண்டு
மல்லித் தழை - ஒரு பிடி
கறிவேப்பிலை - சிறிதளவு
எலுமிச்சம்பழச் சாறு- 2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேவையானவை :
எண்ணெய் - 4ஸ்பூன்
கடுகு - 1/2ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2ஸ்பூன்
கறி வேப்பிலை - சிறிதளவு
தேங்காய் துருவல் - 4ஸ்பூன்
சோம்பு - 1/2ஸ்பூன்
கசகசா - 1/2ஸ்பூன்
தக்காளி - 2
வெங்காயம் - 2
புளி - லெமன் அளவு
மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
மல்லித்தூள் - 2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
அரிசி, பருப்புகளை ஒன்றாக ஊறவையுங்கள். அவற்றுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக, கெட்டியாக அரைத்தெடுங்கள். அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு எல்லாவற்றையும் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுங்கள். காரச் சட்னியுடன் பரிமாறுங்கள். அல்லது இதை குழம்பிலும் போடலாம்.
தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்
நன்றி ---

0 Comments