கொத்தமல்லி குழம்பு செய்வது எப்படி என்று இங்கு பார்கலாம்.சமையல் தமிழ் டிப்ஸ்-ல் வாருங்கள்.
தேவையானப் பொருட்கள்:
கொத்தமல்லி - 1கட்டு
கறிவேப்பிலை - சிறிது
புளி - லெமன் அளவு
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 2ஸ்பூன்
வெந்தயம் - 1/2ஸ்பூன்
மிளகு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
பூண்டு - 4
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
நல்லெண்ணை - 3ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன்
உப்பு - 1ஸ்பூன்
செய்முறை:
கொத்துமல்லித்தழையை நறுக்கி வைத்துக் கொள்ளவும். நறுக்கிய கொத்துமல்லி ஒரு நடுத்தர அளவு கிண்ணம் இருக்க வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, அதில் மிளகாய், தனியா, மிளகு, சீரகம், வெந்தயம் அகியவற்றைப்போட்டு வறுக்கவும். பின்னர் அதில் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், அதில் தக்காளியை நறுக்கிப் போட்டு, சிறிது உப்பும் சேர்த்து, தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும்.கடைசியில், கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை இறக்கி ஆற விடவும். ஆறியபின், மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.
எண்ணையை ஒரு கடாயில் விட்டு, சூடானதும் கடுகு,கறிவேப்பிலையைப் போடவும். அதில் அரைத்த விழுதை போட்டு பின் கரைத்து வைத்துள்ள் புளித்தண்ணீரை விட்டு நன்றாகக் கலக்கி விடவும். குழம்பு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது தண்ணீரைச் சேர்த்து, உப்பு சேர்த்து,கெட்டியாகும் வரை வைத்திருந்து இறக்கி வைக்கவும்.சுவையான கொத்தமல்லி குழம்பு ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி --

0 Comments