கடலைப் பருப்பு வடை SAMAYAL TAMIL TIPS

எளிதான முறையில் கடலைப் பருப்பு வடை செய்வது எப்படிஎன்று இங்கு பார்கலாம்.சமையல் தமிழ் டிப்ஸ்-ல் வாருங்கள்.

KadalaParuppuVada SAMAYAL TAMIL TIPS


தேவையான பொருட்கள்:

வெங்காயம்            -       1
கருவேப்பில்லை   -       சிறிது
உப்பு                           -       தேவையான அளவு
எண்ணெய்              -       தேவையான அளவு


அரைக்க வேண்டிய பொருட்கள்: 
             
கடலை பருப்பு       -     1கப்
பச்சைமிளகாய்    -     3
சீரகம்                         -    1ஸ்பூன்
இஞ்சி                         -    சிறிது அளவு
பூண்டு                       -    2பல்

செய்முறை :

முதலில் கடலை பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.அரைத்த பின்பு அதில் வெங்காயம், கருவேப்பில்லை, மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்து கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிசைந்து வைத்த மாவை உருண்டையாக அல்லது விருப்பமான வடிவில் போட்டு பொரித்து எடுக்கவும்.எளிதான முறையில் கடலைப் பருப்பு வடை ரெடி..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

truckoholics ads

Post a Comment

0 Comments