ஜிஞ்சர் சிக்கன் கிரேவி SAMAYAL TAMIL TIPS

ஜிஞ்சர் சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல்  பார்க்கலாம் .
GingerChickenGravy,SamayalTamilTips

தேவையான பொருள்கள்: 

கோழி                    -      1/2கிலோ
எண்ணெய்          -     தேவையான அளவு
பட்டை                   -     1
லவங்கம்              -     2
கிராம்பு                 -    2
இலை                     -    2
மிளகாய்த்தூள்  -    2ஸ்பூன்
இஞ்சி                     -            2துண்டு
பூண்டு                   -   7பல்
மஞ்சள் தூள்       -  1ஸ்பூன்
உப்பு                       -  தேவையான அளவு
கறிவேப்பிலை   -  சிறிதளவு
கொத்தமல்லி     -  ஒரு கைபிடி

பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பட்டை, லவங்கம், கிராம்பு, இலை தனியாக  மிக்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.

செய்முறை:

முதலில் சிக்கனை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதில் சிக்கனைப் போட்டு நன்றாக கிளறி வைத்து கொண்டு அதில் அரைத்து வைத்துள்ள பொடியையும் போட்டுதண்ணீர் தேவையான அளவு சேர்க்க வேண்டும் .குக்கரில் இரண்டு விசில் வரும்வரை மூடி வைக்கவும். பின்பு சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வரும் வரை கிளறவும். கடைசியில் கறிவேப்பிலையை ,கொத்தமல்லி தூவி  இறக்கவும்.ஜிஞ்சர் சிக்கன் கிரேவி ரெடி ..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

truckoholics ads

Post a Comment

0 Comments