ஃபிங்கர் ஃபிஷ் SAMAYAL TAMIL TIPS

சுவையான முறையில் ஃபிங்கர் ஃபிஷ்  செய்வது எப்படி என்று இங்கு சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.

FingersFish,SamayalTamilTips

தேவையான பொருட்கள்:

வஞ்சிரம்  மீன் துண்டு         -    1/2கிலோ
எண்ணெய்                             -     தேவையான அளவு
மஞ்சள் தூள்                           -     1/2 ஸ்பூன்
கார்ன் ப்ளார்  மாவு              -     3ஸ்பூன்
மிளகாய் தூள்                        -     1ஸ்பூன்
தனியா தூள்                          -     1ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது           -      2ஸ்பூன்
சீரக தூள்                                -     1/4ஸ்பூன்
அரிசி மாவு                            -     1ஸ்பூன்
மைதா மாவு                          -     1ஸ்பூன்
எலுமிச்சை சாறு                  -     1/2ஸ்பூன்
முட்டை                                   -     1
உப்பு                                        -     தேவையான அளவு

செய்முறை :

முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து  விரல் நீள துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

பின்னர் கார்ன் ப்ளார்,தனியா தூள்,மிளகாய் தூள்,இஞ்சிபூண்டு விழுது,சீரக தூள்,அரிசி மாவு,மைதா மாவு, எலுமிச்சை சாறு,உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்து கடைசியாக முட்டை சேர்த்து ஒரளவு கெட்டியாக  கரைத்துக் கொள்ளவும்.பின்  மீனை மாவில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும்  மிதமான சூட்டில் பொரித்து  எடுக்கவும்.இப்போது
சுவையான ஃபிங்கர் ஃபிஷ் ரெடி..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

truckoholics ads


Post a Comment

0 Comments