சிக்கன் சால்னா SAMAYAL TAMIL TIPS

சுவையான சிக்கன் சால்னா செய்வது எப்படி என்று இங்கு பார்கலாம்.சமையல் தமிழ் டிப்ஸில் வாருங்கள். 

ChickenSalna,SamayalTamilTips

தேவையான பொருட்கள்:
சிக்கன்                           -    1/2கிலோ
எண்ணெய்                   -    3ஸ்பூன்
வெங்காயம்                 -    1
பச்சை மிளகாய்         -   3
தக்காளி                         -    2
மிளகாய் தூள்              -    1ஸ்பூன்
தனியா தூள்                 -    2ஸ்பூன்
மஞ்சள் தூள்                 -     1/2ஸ்பூன்
சீரகம் தூள்                    -     1ஸ்பூன்
உப்பு                                 -    தேவையான அளவு
இஞ்சிபூண்டுவிழுது  -     2ஸ்பூன்
கொத்தமல்லி               -     சிறிது

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள் :

எண்ணெய்     -     1ஸ்பூன்
பட்டை              -      2
சோம்பு             -     1ஸ்பூன்
ஏலக்காய்        -     5
கிராம்பு            -     5
தேங்காய்        -     1/2முடி
கசகசா             -      1ஸ்பூன்

பாத்திரத்தில்,எண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா,தேங்காய்போட்டு,வதக்கவும்.பிறகு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை :

குக்கரை அடுப்பில் வைத்து,எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.பிறகு அதில் இஞ்சி பூண்டுவிழுது சேர்த்து வதக்கிய, பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.அதில் மிளகாய் தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள்,சீரகம் தூள்,சேர்த்து கிளறி, சிக்கனையும் சேர்த்து, நன்கு பிரட்டி விட வேண்டும்.அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு,இறக்கி வைக்க வேண்டும்.பின் குக்கரை திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது ஊற்றி கிளறி,பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால்,சுவையான சிக்கன் சால்னா ரெடி..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

truckoholics ads


Post a Comment

0 Comments