கருப்பு கொண்டைக்கடலை சென்னா கட்லெட் SAMAYAL TAMIL TIPS

கருப்பு கொண்டைக்கடலை சென்னா கட்லெட் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல்  பார்கலாம்.

KARUPPU KONDA KADALI ChannaCutle SamayalTamilTips

தேவையான பொருள்கள் : 

கருப்பு கொண்டைக்கடலை   -        1கப்
பிரெட்  துண்டு                               -        4
பெரிய வெங்காயம்                    -        1
பச்சை மிளகாய்                           -        2
இஞ்சி துருவல்                               -        சிறிதளவு
கரம் மசாலா                                  -        1/2ஸ்பூன்
மஞ்சள்தூள்                                    -        1/4ஸ்பூன்
எண்ணெய்                                     -        2ஸ்பூன்
மல்லி இலை                                   -       சிறிதளவு
உப்பு                                                  -       தேவையான அளவு

செய்முறை :

கொண்டைக்கடலையை தனியே வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம்,  உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்துவதக்கவும்.வதக்கிய கலவையுடன் பிரெட்  துண்டு   வேக வைத்த கடலை, கரம் மசாலா சேர்த்து, சிறிது அளவு உப்பு   சேர்த்து நன்கு பிசைந்து  இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.பின்பு தோசை தவாவில் உருண்டை களை தட்டி இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தட்டில் வைத்து கொத்தமல்தமல்லி இலை தூவி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.சென்னா கட்லெட் ரெடி..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.


நன்றி ---

truckoholics ads

Post a Comment

0 Comments