வெஜ் நூடுல்ஸ் SAMAYAL TAMIL TIPS

வெஜ் நூடுல்ஸ் செய்வது எப்படிஎன்று இங்கு சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம். 

VegNoodles, SamayalTamilTips


தேவையான பொருட்கள் : 

எண்ணெய்                   -       2ஸ்பூன்
கோஸ்                          -       50கிராம்
பீன்ஸ்                           -       10
 கேரட்                           -        2
 பட்டாணி                    -       5பாக்கெட்
மேகி நூடுல்ஸ்          -       2பாக்கெட்
வெங்காயம்                -       1
தக்காளி                       -       ¼
கொத்தமல்லி            -       சிறிது,
சோம்புத் தூள்            -       1/4ஸ்பூன்
பச்சை மிளகாய்        -       2
மிளகாய் தூள்            -      1/4ஸ்பூன்
மிளகு தூள்                 -      1/4ஸ்பூன்
சீரகம்                           -      1/4ஸ்பூன்
எலுமிச்சை சாறு       -      1/4ஸ்பூன்
உப்பு                              -      தேவைக்கு
இஞ்சிபூண்டு               -      1ஸ்பூன்

வேகவைக்க வேண்டியவை :

முதலில் குக்கரில் காய்களை போட்டுஅத்துடன்,,உப்பு ,பிறகு  தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

செய்முறை :

கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து நீளமாக நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும் இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும்.பச்சை வாசனை போன பின், நறுக்கின தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு குழைந்ததும் வேக வைத்துள்ள காய்களை சேர்க்கவும். அதனுடன் மிளகாய் தூளையும் சேர்த்து கிளறவும் பின்னர்,  நூடுல்ஸை சேர்த்து தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். காய்கள் வேக வைத்த நீரும் சேர்த்துக் கொள்ளலாம். தேவையெனில் 2 தேக்கரண்டி எண்ணெய்சேர்த்துக்கொள்ளவும். நூடுல்ஸ் உதிரி, உதிரியாக வரும். நூடுல்ஸை மூடி வைத்து வேக விடவும். இடையிடையே கிளறி விடவும்.நூடுல்ஸ் வெந்ததும், உப்பு சரிப்பார்த்து டேஸ்ட் மேக்கரை சேர்க்கவும். பின் நன்கு கிளறி, மிளகு தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இப்போது, சில துளிகள் எலுமிச்சையை பிழிந்து, பரிமாறலாம்.வெஜ் நூடுல்ஸ் ரெடி

 இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்

truckoholics ads





Post a Comment

0 Comments