ஈஸியான தேங்காய் சாதம் samayal tamil tips

ஈஸியான தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று இங்கு  சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.  

thengai,sadam, samayal,tamil,tips



தேவையான பொருட்கள் : 

அரிசி                                -              3/4 கிலோ
எண்ணெய்                     -              500 ml
சோம்பு                            -               1/4ஸ்பூன்
உப்பு                                  -               2 ஸ்பூன்
மிளகாய்                         -               4
பெருங்காயம்               -               1/4ஸ்பூன்
பட்டை                            -               2
லவங்கம்                       -               2
தேங்காய்                       -               1கப்
முந்திரி                           -               10
உளுந்துபருப்பு             -               1ஸ்பூன்
கடலைப் பருப்பு          -               1ஸ்பூன்
     
வேகவைக்க வேண்டியவை:

முதலில் அரிசியை நன்கு 1/2 மணிநேரம் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 6 கப் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கி, சாதத்தை தட்டில் போட்டு உலர வைக்க வேண்டும்.


செய்முறை: 

முதலில்,கடாயில்,எண்ணெய்,விட்டு,பட்டை,லவங்கம்,சோம்பு,மிளகாய்,முந்திரி, உளுந்து,பெருங்காயம்,கடலைப் பருப்பு,கருவேப்பிலை, போட்டு வதக்கவும். பின்பு துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.கலவையானது ஓரளவு பொன்னிறமாக மாறும் போது, சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.  ஈஸியான தேங்காய் சாதம் ரெடி.

 இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..


நன்றி --- 


truckoholics ads



Post a Comment

0 Comments