ருசியான செட்டிநாடு சிக்கன் குழம்பு எளிதான முறையில் செய்வது எப்படி சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 2
தக்காளி - 3
பட்டை - 1
ஏலக்காய் - 3
லவங்கம் - 2
சோம்பு - 1/2ஸ்பூன்
கோழி - 1கிலோ
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
சிக்கன் குழம்பு தூள்- 4ஸ்பூன்
கொத்தமல்லி- - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது- 4ஸ்பூன்
தேங்காய் - 1/4மூடி
செய்முறை
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை,ஏலக்காய்,லவங்கம் சேர்க்கவும்
பின் பச்சை மிளகாய்,கொத்தமல்லி சேர்த்து சுருள விடவும்
வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
பச்சை வாசனை போனதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
பின் தக்காளியை சேர்த்து குழைய விடவும்
மசாலாவில் எண்ணெய் பிரிந்து வந்ததும் கரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும். தேவைக்குஏற்ப தண்ணீர் ஊற்றி உப்பும் சேர்க்கவும் நன்கு கொதி வந்த பிறகு கோழியை சேர்க்கவும்.
வெந்ததும் பரிமாறலாம் .ருசியான செட்டிநாடு சிக்கன் குழம்பு



0 Comments