ஸ்பெஷல் முருங்கைகாய் கார குழம்பு செய்வது எப்படி?Samayal Tamil Tips

ஸ்பெஷல் முருங்கைகாய் கார குழம்பு   
                              
                                 
murungakkai kara kuzhambu samayal tamil tips
   

தேவையான பொருட்கள் :

 எண்ணெய்                                     2ஸ்பூன்
கடுகு                                                 1ஸ்பூன்
உளுத்தம் பருப்பு                          1/2ஸ்பூன்
வெந்தயம்                                        1  ஸ்பூன்
பூண்டு                                                10
மல்லி  தூள்                                     1 ஸ்பூன்
கருவேப்பிலை                               10
கொத்தமல்லி                                 சிறிது
 வெங்காயம்                                    2
 தக்காளி                                            1
குழம்பு மிளகாய் தூள்                 3டீஸ்பூன்
முருங்கைகாய்                              2
 புளி கரைசல்                                  லெமென் அளவு

செய்முறை: 

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் அதில் வெங்காயத்தை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும். பின் அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கிவைத்துள்ள முருங்கைகாயை போட்டு சிறிது நேரம் வதக்கி,   குழம்பு மிளகாய் தூள்,மல்லி  தூள் ,மஞ்சள் தூள் சேர்த்து பின் அதில் கொஞ்சம் தண்ணீரை விட்டு, முருங்கைகாய் வேகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும் புளிக் கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.  ஸ்பெஷல் முருங்கைகாய் காரா குழம்பு  

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் 


truckolics ads



Post a Comment

0 Comments