சுவையான சர்க்கரை பொங்கல் SAMAYAL TAMIL TIPS

சுவையான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் . 
SarkkaraiPongal ,SamayalTamilTips

தேவையான பொருள்கள் :

பச்சரிசி                 -    2கப்
பாசி பருப்பு         -    1/2கப்
பால்                         -    1/2 கப்
முந்திரிப்பருப்பு -    10
வெல்லம்                -     2.1/2கப்
நெய்                         -     2ஸ்பூன்
ஏலக்காய்               -     1ஸ்பூன்
திராட்சை              -     4

செய்முறை:

பாசி பருப்பை அரை ஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வும்.சிறிது நெய்யில், முந்திரிப்பருப்பையும் , திராட்சையையும் பொன்னிற மாக வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி ப‌ருப்பு ஒன்றாக‌ போட்டு 5 க‌ப் த‌ண்ணீருடன் பால் சேர்த்து குக்கரில் மூடி வேக விடவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டவும்.அரிசி ப‌ருப்பு வெந்த‌தும் இற‌க்கி ந‌ன்கு ம‌சிக்க‌வும்.அதில் க‌ரைத்து வைத்த‌ வெல்ல‌த்தை சேர்த்து அடுப்பில் வைத்து ந‌ன்கு கிள‌ற‌வும் கெட்டி ஆன‌தும் ஏல‌ப்பொடி வ‌றுத்து வைத்த‌ முந்திரி பருப்பு போட்டு நெய் விட்டு இற‌க்க‌வும்.
சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

நன்றி --
TRUCKOHOLICS ,   ADS

Post a Comment

0 Comments