சுவையான இனிப்பு அவுல் புட்டு SAMAYAL TAMIL TIPS

சுவையான இனிப்பு அவுல் புட்டு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் . 
InppuAvulPuttu , SamayalTamilTips

தேவையானப்பொருட்கள்:

அவல்                                    -    1கப்
வெல்லம் பொடித்தது   -    1/2கப்
தேங்காய்த்துருவல்       -    1/4கப்
ஏலக்காய்தூள்                 -    1/2ஸ்பூன்
நெய்                                     -    4ஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் அவலைப் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும். சற்று ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். பொடித்தெடுத்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக் கலக்கவும். வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நன்றாகக் கரைந்து கொதிக்க ஆரம்பித் ததும், அதை அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.பின்னர் அதை மீண்டும் அடுப்பில் ஏற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.பாகில் தேங்காய்த்துருவல் மற்றும் பொடித்த அவல் இரண்டையும் போட்டு கிளறி உடனே அடுப்பை அணைத்து விடவும்.பின்னர் அதில் ஏலக்காய்தூள்,நெய்,ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு மூடி வைக்கவும்.சுவையான இனிப்பு அவுல் புட்டு ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

நன்றி --

TRUCKOHOLICS ,   ADS

Post a Comment

0 Comments