சுவையான ராகி பாதாம் SAMAYAL TAMIL TIPS

சுவையான ராகி பாதாம் செய்வது எப்படி செய்வது என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
RagiPatham , SAMAYAL TAMIL TIPS

தேவையான பொருட்கள்:

ராகி மாவு            -     3ஸ்பூன்
தண்ணீர்              -     1/2கப்
பாதாம் பவுடர்  -      2ஸ்பூன்
குளிர்ந்த பால்   -      2கப்
சர்க்கரை            -     தேவையான அளவு

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும், அவற்றில் ராகி மாவை போட்டு தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கிளறி விடவும். பின்பு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, குறைவான தீயில் கெட்டியாக வருமறை கிளறி விடவும்.ராகி மாவு கெட்டியானவுடன் அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்கவும். மாவு நன்றாக குளிர்ந்தவுடன், மிக்சியில் போட்டு அதனுடன் சர்க்கரை, பாதாம் பவுடர், பால் சேர்த்து சிறிது நேரம் அரைக்க வேண்டும்.பின்பு மிக்சியில் இருந்து அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றினால் சுவையுள்ள மற்றும் ஆரோக்கியமான
சுவையான ராகி பாதாம் மில்க் ஷேக் ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---    


Post a Comment

0 Comments