சுவையான சிக்கன் சீஸ் ரோல் SAMAYAL TAMIL TIPS

சுவையான சிக்கன்  சீஸ் ரோல் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
ChickenCheesRoll , SamayalTamilTips .

தேவையான பொருள்கள் :

கோதுமை மாவு              -   2கப்
எண்ணெய்                       -   தேவையான அளவு
உப்பு                                    -   தேவைக்கு
சிக்கன்                               -   200கிராம்
சீஸ்                                      -    100கிராம்
வெங்காயம்                    -    2
தக்காளி                            -   1
குடைமிளகாய்               -   1/4கப்
கரம் மசாலா தூள்        -   1/2ஸ்பூன்
மிளகாய் தூள்                 -   1/2ஸ்பூன்
சிக்கன் மசாலா தூள்  -   1/2ஸ்பூன்
கொத்த மல்லித்தழை -  1கைப்பிடி

செய்முறை :

கொத்தமல்லி, குடை மிளகாய், தக்காளி, வெங்காய த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.  சிக்கன் நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். கோதுமை மாவில், உப்பு, எண்ணெய், வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊறவிட்டு, சப்பாத்தி களாக சுட்டு ஹாட்பாக்சில் போட்டு வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.சிக்கன் ,உப்பு, மசாலா தூள்கள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும். தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்தவுடன் அதில் கெர்த்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.சப்பாத்தியில் வெண்ணெய் தடவி சிக்கன் கலவையை நடுவில் வைத்து அதன் மீது சீஸ் தூவி ரோல் செய்து மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் வைத்து இரண்டாக வெட்டி பரிமாறவும்.
சுவையான சிக்கன்  சீஸ் ரோல் ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

TRUCKOHOLICS , ADS


Post a Comment

0 Comments