சுவையான பிள்ளையர் கொழுக்கட்டை SAMAYAL TAMIL TIPS

சுவையான பிள்ளையர் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
 PillayarKozhukattai , SamayalTamilTips

தேவையான பொருள்கள் : 

அரிசி               -    1/2கிலோ
தேங்காய்       -    1
வெல்லம்        -    150கிராம்
ஏலக்காய்      -     5

செய்முறை : 

அரிசியைச் சுத்தம் செய்து மிசினில் கொடுத்து மாவாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் மாவிற்கு ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். கொதிக்கும் வெந்நீரில் மாவைக் கொட்டி கட்டி தட்டாமல் நன்றாகக் கிளறி இறக்கி வைத்து பதினைந்து நிமிடம் மூடி வைக்க வேண்டும். தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும்.வெல்லத்தை பொடி செய்து ஏலப்பொடி, தேங்காயைப் போட்டுக் கலந்து வைத்து கொள்ள வேண்டும். இப்போது பூரணம் தயாராகிவிடும். உள்ளங்கையில் எண்ணெய்த் தடவி மாவை சிறு உருண்டைகளாக்கி தட்டையாக்கி வைத்து நடுவில் ஒரு கரண்டி பூரணத்தை வைத்து சமோசாவுக்கு மடிப்பது போல் மடித்து விடவும். பின்னர் அவற்றை இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும். சுவையான கொழுக்கட்டை ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

TRUCKOHOLICS , ADS


Post a Comment

0 Comments