சுவையான கோவா போளி SAMAYAL TAMIL TIPS

சுவையான கோவா போளி செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
KovaPoli ,SamayalTamilTips

தேவையானவை :

பால்                      -   5கப்
மைதாமாவு      -   2கப்
சர்க்கரை           -   1/2கப்
ஏலக்காய்தூள் -  1ஸ்பூன்
கேசரி பவுடர்    -  1சிட்டிகை
நெய்                     -   1/2கப்

செய்முறை :

பாலை சுண்டக் காய்ச்சி, கோவா போல கெட்டியாக ஆனதும் சர்க்கரை போட்டு இறக்கவும்.

ஏலக்காய்தூள் சேர்த்து ஆறவிடவும். பால் காய்ந்துகொண்டிருக்கும்போதே, மைதாமாவில் கேசரி பவுடர் போட்டு நெய் விட்டு, தண்ணீர் தெளித்து மிருதுவாகப் பிசைந்துகொள்ளவும். இது2 முதல் 3 மணி நேரம் வரை ஊறட்டும். அதிலிருந்து, ஒரு எலுமிச்சை அளவு மாவை எடுத்து, கிண்ணம் போல் செய்து, உள்ளே கோவாவை வைத்து மூடி, எண்ணெய் தொட்டு, போளியாகத் தட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து, போளியைப் போட்டு, இருபுறமும் நெய் விட்டு திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான கோவா போளி ரெடி ..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

truckoholics ads

Post a Comment

0 Comments