சுவையான மோர் குழம்பு வறுத்தரைத்த SAMAYAL TAMIL TIPS

சுவையான  மோர் குழம்பு வறுத்தரைத்த முறையில் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
MorKuzhambu , SamayalTamilTips

தேவையான பொருள்கள் :

எண்ணெய்                -     தேவையான அளவு 
கடுகு                            -     1ஸ்பூன்
குடமிளகாய்             -     1
கத்திரிக்காய்          -     2
வெண்டைக்காய்   -     6
தயிர்                            -     1/2லிட்டர்
உப்பு                            -     தேவையான அளவு
மஞ்சள் தூள்            -     1/2ஸ்பூன்

வறுத்தரைக்க :

கடலைப்பருப்பு      -   1ஸ்பூன்
துவரம்பருப்பு          -   1ஸ்பூன்
தனியா                       -     2ஸ்பூன்
வெந்தயம்                 -   1ஸ்பூன்
இஞ்சி                          -   1துண்டு
காய்ந்த மிளகாய்  -   4
தேங்காய்                  -     1/4முடி

செய்முறை :


அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வறுக்க வேண்டிய பொருட்களை வதக்கி ஆற விட்டு  அரைக்கவும். நன்றாக அரைத்ததும் தயிரையும்  போட்டு ஒரு சுற்றுக்கு அரைக்க வேண்டும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி  குடமிளகாய், கத்திரிக்காய், வெண்டைக்காயைப் போட்டு ஐந்து நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.பிறகு தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து காய்களை வேக விட வேண்டும். காய் வெந்ததும் அரைத்தக் கலவையைப் போட வேண்டும். அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும்.பத்து நிமிடங்கள் குழம்பு கொதித்ததும்.தனியே ஒரு பாத்திரத்தில் எண்ணெயிட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்க வேண்டும். தாளித்ததைக் குழம்பில் கொட்டி இறக்க வேண்டும்.
சுவையான  மோர் குழம்பு வறுத்தரைத்த முறையில் ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி --- 

TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments