சுவையான மட்டன் குருமா SAMAYAL TAMIL TIPS

சுவையான மட்டன் குருமா செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் .

MuttonKuruma ,SamayalTamilTips

தேவையான பொருள்கள் : 

மட்டன்                                  -   1/2கிலோ
வெங்காயம்                       -   2       
இஞ்சிபூண்டுவிழுது       -   2ஸ்பூன்
தக்காளி                              -   1
மிளகாய் தூள்                   -   1ஸ்பூன்
மட்டன் மசாலா               -    1ஸ்பூன்
மஞ்சள் தூள்                     -    1ஸ்பூன்
லெமன் சாறு                    -    2ஸ்பூன்
கறிவேப்பிலை                -    சிறிது
உப்பு                                    -    தேவையான அளவு
எண்ணெய்                       -    தேவையான அளவு

அரைக்க வேண்டியவை :

சீரகம்                     -   1ஸ்பூன்
சோம்பு                  -   1ஸ்பூன்
கசகசா                  -   1ஸ்பூன்
பட்டை                   -   1
ஏலக்காய்             -   2
தேங்காய்             -   1/4முடி
முந்திரி                 -    8
பச்சை மிளகாய்-  4
கொத்தமல்லி     -   சிறிது
புதினா                 -     சிறிது

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்., மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை :

குக்கரை  அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்னர், தக்காளியை சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மட்டன் மசாலா ,மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு வதக்க வேண்டும்.அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை கிளறி விட வேண்டும்.பிறகு லெமன் சாறு மற்றும் மட்டன்  துண்டுகளை போட்டு,தேவையான அளவு  தண்ணீரை ஊற்றி, 6விசில் வந்ததும் இறக்கவும். பின்  கொத்தமல்லி தூவி  பரிமாறவும்.
சுவையான மட்டன்  குருமா ரெடி ..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments